×

உலக கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி: 3-2 கணக்கில் நெதர்லாந்தை வீழ்ச்சி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்

ஒடிசா: உலக கோப்பை ஹாக்கி போட்டியில் முதல்முறையாக பெல்ஜியம் அணி சாமியன் பட்டம் வென்றுள்ளது. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே பெல்ஜியம் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.  8வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் டாம் பூன் முதல் கோலை அடித்தார். இதைதொடர்ந்து அந்த அணி வீரர்கள் தொடர்ந்து கோல் அடித்து அசத்தினர். சிமோன் (19வது நிமிடம்), செட்ரிக் சார்லியன் (42வது நிமிடம்), அலெக்சாண்டர் (45, 50வது நிமிடம்), செபாஸ்டியன் (53வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

இங்கிலாந்து அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. தங்களுக்கு கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இங்கிலாந்து வீரர்கள் வீணடித்தனர். இந்நிலையில், 6-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த மற்றொரு அரையிறு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி,  நெதர்லாந்துடன் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

9வது நிமிடத்தில் கிளென் ஸ்சுர்மானும், 20வது நிமிடத்தில் சீவ் வான் ஆகியோர் கோல் அடித்தனர். இதன்மூலம், நெதர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 45வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிம் ஹோவர்டும், கடைசி நிமிடத்தில் எட்டியும் கோல் அடித்து அசத்தினர். இந்நிலையில், 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெற்றது. பெனால்டி ஷூட்-அவுட் முடிவில், நெதர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று 7வது முறையாக பைனலில் நுழைந்தது.

இந்நிலையில், இன்று 7 மணிக்கு தொடங்கிய இறுதி போட்டியில், நெதர்லாந்து-பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 - 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.
உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Cup ,hockey final ,Netherlands ,Champions League , World Cup Hockey, Netherlands, Champion Degree, Belgium
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது