×

தொடர்ந்து 4வது ஷிப்ட் செய்யும்படி அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் மயங்கி விழுந்த கண்டக்டர்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் குடியாத்தம் அரசு போக்குவரத்து பணிமனை கண்டக்டர். கடந்த 12ம் தேதி குடியாத்தம்- காட்பாடி டவுன் பஸ்சில் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து 13ம் தேதியும் அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் பணி செய்தார். பின்னர் மீண்டும் அதிகாரிகள் உத்தரவால் 3வது முறையாக நேற்று முன்தினமும் பணிக்கு சென்றார். தொடர்ந்து 3 ஷிப்ட் பணி செய்த வெங்கடேசன், மாலையில் கலெக்‌ஷன் பணத்தை பணிமனையில் உள்ள அலுவலகத்தில் செலுத்த ெசன்றார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், கலெக்‌ஷன் பணத்தை வாங்க மறுத்து 4வது ஷிப்ட் தொடரும்படி கூறி உள்ளனர். ஆனால் வெங்கடேசன், ‘என்னால் முடியவில்லை, கடும் அசதியாக உள்ளது’ என தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஏற்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.   இதனால் அவருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெங்கடேசனுக்கு ஆதரவாக மற்ற கண்டக்டர்களும் குரல் கொடுத்தனர். அப்போது திடீரென வெங்கடேசன், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக சக பணியாளர்கள் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்த
னர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shift , Gudiyatham, Government Transport Workshop, Conductor Venkatesan, faint
× RELATED திகில் கதையில் மம்மூட்டி