திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்

திருமலை: திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் சுமார் 40 டன் மலேசிய நாணயங்களை மாற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.திருப்பதி தேவஸ்தானத்திடம் 52 டன்  வெளிநாட்டு நாணயங்கள் கடந்த 15 ஆண்டுகளாக இருப்பில் இருந்தன. அவற்றை இந்திய ரூபாய் ஆக மாற்ற ரிசர்வ் வங்கி, இந்திய அரசு  ஆகியவற்றை அணுகி தேவஸ்தானம் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வெளிநாட்டுவாழ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு பக்தர்கள் மூலம் மலேசிய நாணயங்கள் தவிர மற்ற நாடுகளை சேர்ந்த 12 டன் நாணயங்களை தேவஸ்தானம் மாற்றிக் கொண்டது. தற்போது தேவஸ்தானத்திடம் சுமார் 40 டன் அளவுக்கு மலேசிய நாணயங்கள் மட்டும் இருப்பு உள்ளன. தனியார் மூலம் ரூபாயாக மாற்ற முடியவில்லை. இதனால் இவற்றை மலேசிய நாட்டு தெலுங்கு சங்கத்தின்  மூலம் 40 டன் நாணயங்களையும் இந்திய ரூபாயாக மாற்றும் முயற்சியில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி 3 நாட்கள் தரிசனங்கள் ரத்து:

திருப்பதியில் நாளை மறுதினம் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் 19ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள்,  அங்கப்பிரதட்சணத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் திவ்ய தரிசனம் உட்பட அனைத்து இலவச தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகம் முழுவதும் 21...