×

சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் : கூட்டுறவு சங்க தேர்தல்; அமமுக வெற்றி

புழல்:செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 7442 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் 8 இயக்குநர்களுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் 12 பேர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 6 பேர், திமுக சார்பில் 2 பேர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஒருவர் என மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர். நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 912 வாக்குகள் பதிவாகின.   இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி மாலை முடிந்தது. இதற்கிடையே கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுகவை சேர்ந்த சௌந்தராஜன் ஐகோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தார். எனவே வாக்கை எண்ணக்கூடாது என உத்தரவு போடப்பட்டது.

தடை உத்தரவு நீக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படலாம் என்று அறிவித்த நிலையில், நேற்று காலை கூட்டுறவு சங்க சார்பதிவாளர் தேர்தல் அலுவலர் சண்முகம் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு அதிமுகவி னர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரி சண்முகம் முடிவை அறிவித்தார்.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட புஷ்பராணி, அந்தோணி, ரமேஷ், தேன்மொழி, சூசைராஜ், ராஜ்குமார் ஆகிய 6 பேரும் வெற்றி பெற்றனர். தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ammu , Co-operative Union Election, Ammukham Success, Saidapet
× RELATED தம்பதி, குழந்தையை தாக்கிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு