×

உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் : பைனலில் நுழைந்தார் சிந்து

குவாங்ஸூ: உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் பிரிவில், தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்து அசத்தினார் பி.வி.சிந்து. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா அரை இறுதியில் போராடி தோல்வி அடைந்தார்.
சீனாவின் குவாங்ஸூ நகரில் நடந்து வரும் இந்த தொடரில், ஆண்டு இறுதி தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில், உலகின் 6வது ரேங்க் வீராங்கனையான பி.வி.சிந்து லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, அரை இறுதிக்கு முன்னேறினார். நேற்று நடந்த அரை இறுதியில் அவர், தாய்லாந்தின் ரட்சனனோக் இன்டனானுடன் மோதினார்.

இப்போட்டியில் சிந்து 21-16, 25-23 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த சூப்பர் சீரிஸ் பைனல்சில் சிந்து, பைனலுக்கு முன்னேறி யமாகுச்சியிடம் தோற்று 2ம் இடம் பிடித்தார்.இம்முறை இறுதிப் போட்டியில் அவர் 5வது ரேங்க் வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். சிந்து, ஒகுஹரா இருவரும் இதுவரை 12 முறை மோதியுள்ளார். இதில் இருவரும் தலா 6 முறை வென்று சமபலத்துடன் உள்ளனர்.லீக் சுற்றில் சிந்து, உலகின் நம்பர்-1, நம்பர்-2 வீராங்கனைகளை வீழ்த்தி உச்சகட்ட பார்மில் இருப்பதால் இன்றைய பைனலில் ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்கள் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா  21-12, 20-22, 17-21 என்ற செட்களில் சீனாவின் ஷி யுகியிடம் போராடி தோல்வி அடைந்தார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bindu Sindhu , World Tour Pains Badminton, PVC, Final
× RELATED உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் : இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன்