×

சில்லி பாயின்ட்...

* வளரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. இதில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன் சேர்த்து, 3 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று கோப்பையை இழந்தது.

*  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது. இப்பதவிக்கு, தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரி கிறிஸ்டன் இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்த 2011ல் தான் நமது அணி உலக கோப்பையை வென்றது. இப்பதவிக்கு ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், இந்திய முன்னாள் ஆல் ரவுண்டர் மனோஜ் பிரபாகர் விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளார்.

* சென்னையில் நேற்று நடந்த ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் சென்னையின் எப்சி அணி 1-3 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் எப்சி அணியிடம் தோல்வி அடைந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ஆசிய கோப்பை கிரிக்கெட் , ரமேஷ் பவார், கேரி கிறிஸ்டன்
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...