×

அரசாணை ரத்தாகாது என்ற ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேட்டி

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையை மூடும் விவகாரத்தில் நாங்கள் பிறப்பித்த அரசாணையை, சர்வதேச நீதிமன்றம் கூட ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு கூறியது. ஆனால் பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து விட்டது. இதனால்  ஆட்சியாளர்கள் பதவியை விட்டு இறங்க வேண்டும்.சுற்றுச்சூழல் சட்டங்களையும், விதிகளையும் மதிக்காத ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அடியாட்கள் மூலம் தீவைப்பு சம்பவத்தை நடத்தி குற்றநிறுவனமாக மாறியுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியாவிலும், உலகத்திலும் எங்கும் இயங்க தகுதியில்லாத, சட்டவிரோத கிரிமினல் நிறுவனமாக மாறியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rulers ,Miguel Interview ,government , state,rat, Rulers ,resign , Interview,Miguelan
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...