×

அவனியாபுரம் அருகே விநாயகரை வணங்கும் ஜல்லிக்கட்டு காளை

அவனியாபுரம் : அவனியாபுரம் அருகே காளை ஒன்று தினமும் விநாயகரை வணங்குவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். தமிழர் திருநாளான `` தை திருநாள்’’ அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும். இதற்காக அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டுக்காக பலர் காளைகளை வளர்த்து போட்டிக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அவனியாபும் அயன்பாப்பாகுடி பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவர் ``காளையன்’’ என்ற காளையை வளர்த்து வருகிறார். இந்த காளைக்கு தற்போது 11 வயதாகிறது. தினமும் அருகில் உள்ள அயன் பாப்பாகுடி விநாயகர் கோயிலில் தலையை தரையில் வைத்து காளை வணங்குகிறது. இதற்காக திருப்பதி காளையை நன்றாக பழக்கப்படுத்தி உள்ளார்.

வெளியூர் ஜல்லிக்கட்டு செல்லும் முன் விநாயகரை வணங்கிய பின்பே காளையன் போட்டியில் பங்கு பெறுகிறது. இதுவரை 270 போட்டிகளில் பங்கு பெற்றுள்ள காளையன் 250க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தங்கக்காசு, டூவீலர், பிரிஜ், வாசிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. நாள் தவறாமல் விநாயகரை வழிபடும் காளையை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்துடன் பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vinayaka ,Avaniyapuram , lord vinayaga, jallikattu,bull , avaniyapuram
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...