பேட்மின்டன் உலக டூர் பைனல்ஸ் அரை இறுதியில் சிந்து: சமீர் வர்மாவும் முன்னேற்றம்

குவாங்ஸூ: உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் ஏ பிரிவு லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடம் பிடித்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார். சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஏ பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அகானே யாமகுச்சியை (ஜப்பான்) வீழ்த்திய சிந்து, 2வது லீக் ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனை டாய் ட்ஸூ யிங்கை (சீன தைபே) வென்று அசத்தினார்.

இந்த நிலையில், நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவின் பெய்வன் ஸாங்கை எதிர்கொண்ட சிந்து, அதிரடியாக விளையாடி 21-9, 21-15 என்ற நேர் செட்களில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரை இறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானுடன் சிந்து மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பி பிரிவில் கந்தபோன் வாங்சரோயனுடன் (தாய்லாந்து) மோதிய இந்திய வீரர் சமீர் வர்மா 21-0, 21-18 என்ற நேர் செட்களில் வென்றார். இந்த பிரிவில் 2 வெற்றி, 1 தோல்வி கண்ட சமீர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: