×

ஜெயலலிதா படத்தை உடைத்த விவகாரம்: திமுக பிரமுகர் விடுதலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவிக நகர் பகுதி திமுக செயலாளராக பதவி வகித்து வருபவர் சி.தமிழ்வேந்தன். கடந்த 2001 செப்டம்பர் 21ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டிடத்திற்குள் நுழைந்து அங்கிருந்து முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எடுத்து 2வது மாடியிலிருந்து வீசியதாகவும் அதனால் மாநகராட்சிக்கு ரூ.730 இழப்பு ஏற்பட்டதாகவும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் 2003ல் தீர்ப்பளித்தது. அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தமிழ்வேந்தனுக்கு பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் 2003 பிப்ரவரியில் தண்டனையை உறுதி செய்தது.

செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழ்வேந்தன் சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கில் மாநகராட்சிக்கு வெறும் ரூ.100 மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குற்றச்சாட்டு தொடர்பாக ரயில்வே டிக்கெட் புரோக்கர்கள் இருவர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளனர். பொதுமக்கள் ஒருவரும் சாட்சியளிக்கவில்லை. எனவே, இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து ெசய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,release ,DMK , Jayalalithaa, DMK chief, release, high court
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...