×

டாக்டர் வி.பி.நாராயணன் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசார்ச் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வி.பி.நாராயணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசார்ச் இன்ஸ்டிடியூட்டின் துணை வேந்தராக கலைஞரால் நியமிக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றிய டாக்டர் வி.பி.நாராயணன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு கல்விப்பணியும், ஏழை எளியவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளித்த அவரின் திறமையும், மனித நேயமும் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VPNarayanan ,death ,MK Stalin , Madras Medical College and Research Institute, former Vice Chancellor, Dr. VP Narayanan
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...