×

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனம் புதியதாக 56 ஷோரூம் திறக்க முடிவு

பெங்களூரு: ஆபரண விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனம் வரும் 2021-22ம் நிதியாண்டில் ₹1,600 கோடி முதலீட்டில் 56 புதிய ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து நிறுவனத்தின் தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், உலகளவில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையின் மத்தியிலும் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இயங்கி வருகிறது. வரும் 2021-22ம் நிதியாண்டில் தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஒடிஷா மற்றும் கேரள மாநிலங்களில் 40 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, ஓமன், கத்தார், பக்ரைன், வளைகுட நாடுகளில் 16 என மொத்தம் 56 புதிய ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.மொத்தம் ரூ.1,600 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் ஷோரூம்கள் மூலம் 1,500 பேருக்கு ேவலைவாய்ப்பு வழங்கப்படும். புதியதாக தொடங்கப்படும் 56 ஷோரூம்களில் வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் சென்னை, லக்னோ, ஐதராபாத், மும்பை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் ஷோரூம்கள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்….

The post மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனம் புதியதாக 56 ஷோரூம் திறக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Malabar Gold and Diamond Company ,Bengaluru ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்