×

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ரபேல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயின. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதுமே ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி ஆளும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 12 மணிக்கு கூடியது.

அப்போது ரபேல் வழக்கின் நீதியை சுட்டிக்காட்டிய பாரதீய ஜனதா எம்.பிக்கள், தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் அவையை வரும் திங்கட்கிழமை வரை சபாநாயகர் சுமித்திரை மகாராஜன் ஒத்திவைத்தார். இதேபோல மாநிலங்களவையிலும் ரபேல் தீர்ப்பை முன்னிறுத்தி பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் மேகதாது அணை, ரிசர்வ் வங்கி இயக்குனர் மாற்றம், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி அதிமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலங்களவையும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : resignation ,Lok Sabha ,Rajya Sabha ,parliamentarians , Parliament,the Lok Sabha,Rajya Sabha,deferred
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...