×

வயிற்று போக்கால் அவதி : ஒகேனக்கல் வனத்தில் பெண் யானை சாவு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில், கனவாய் என்ற பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும், அருகே உள்ள வனப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு உள்ளது. இதனால் அங்கு வனத்துறையினர் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இங்கிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் கனவாய் ஊர்ரடி சரகம் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் வனதுறையினர் நேற்று ரோந்து பணியில் மேற்கொண்டனர்.அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தை கண்ட அவர்கள் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின் பேரில், வனத்துறையினர் யானை இறந்து கிடந்த கனவாய் ஊர்ரடி பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவழைக்கப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார். அதில் யானைக்கு கடந்த 3 நாட்களாக வயிற்கு போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், யானையால் நடமாட முடியாமல் சோர்வாக காணப்பட்ட நிலையில், யானை இறந்துள்ளது என மருத்துவர் தெரிவித்தார். பிரேத பரிசோதனை முடிந்து இறந்த பெண் யானையை அங்கேயே பெரிய குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர். தொடர்ந்து மற்ற யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கிராமமக்களுக்கு யானைகளின் நடமாட்டம் குறித்து தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest ,Hogenakkal , Hoganakkal, forest,elephant
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!