×

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2வது நாளாக கொடிமரம் ஏற்றும் பணி நடந்தது : 400 படிக்கட்டுக்கு நகர்த்திய பக்தர்கள்

சிப்காட்: ராணிப்பேட்டை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலுக்கு 2வது நாளாக கொடி மரம் கொண்டு செல்லும் பணி நேற்று நடந்தது. இதில் 400 படிக்கட்டுகளுக்கு பக்தர்கள் நகரத்தி சென்றனர். ராணிப்பேட்டை அடுத்த வள்ளிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி குகைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் உதவியுடன் 50 அடி உயரத்தில் 3 டன் எடையில் 5 அடி சுற்றளவு கொண்ட தேக்கு மரத்தால் ஆன புதிய கொடி மரம் செய்யப்பட்டது.

இதனை மலைக்கு எடுத்து செல்லும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தமுள்ள 450 படிக்கட்டுகளில் முதல் நாளான நேற்று முன்தினம் 150 படிக்கட்டுகள் நகர்த்தி எடுத்து செல்லப்பட்டது. 2வது நாளாக நேற்று காலை முதல் கொடிமரத்தை கொண்டு செல்லும் பணி தொடங்கியது. மாலை 4 மணியளவில் 400 படிக்கட்டுகள் வரை பக்தர்கள் நகர்த்தி சென்றனர். இந்த பணி இன்று காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்க உள்ளது. கொடிமரத்தை கோயிலுக்கு கொண்டு செல்லும் பணியில் வள்ளிமலை உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vallimalai Subramaniya Swami , Vallimalai, Subramanya Swami Temple, kodimaram, devotees
× RELATED வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய கொடிமர கும்பாபிஷேகம்