×

போட்டி தேர்வு எழுதுபவர்கள் புகார் எதிரொலி: ஆன்லைனில் பணம் செலுத்தினால் வீட்டிற்கே புத்தகம் அனுப்ப திட்டம்: அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக அறநிலையத்துறையில் உள்ள கோயில்களில் இளநிலை உதவியாளர், செயல் அலுவலர், உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த துறை பணியிடங்களுக்காக இரண்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், இரண்டாவது தேர்வு இந்து சமயம் தொடர்பான சைவமும், வைணவமும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான புத்தகங்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் போட்டி தேர்வர்கள் திணறி வருகின்றனர். பலர் புத்தகம் வாங்குவதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட ஒரு சில கோயில்களில் மட்டுமே இந்த புத்தகம் கிடைப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

இதை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் போட்டி தேர்வர்களின் வீடுகளுக்கு புத்தகம் அனுப்பி வைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி www.tnhrce.org என்ற இணையதளத்தில் ஆன்மீக நூல்களை பெற என்று கிளிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தினால், போட்டி தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு ஒரு வாரத்தில் புத்தகம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘அறநிலையத்துறை இணையத்தில் ஆன்மீக நூல்கள் பெற என்பதை கிளிக் செய்தவுடன் இதர புத்தகம் (other books) என்று கேட்கும். அதை கிளிக் செய்து பணம் செலுத்தி, நமது முகவரியை குறிப்பிட்டால் போதும். தேர்வர்களின் வீட்டிற்கே புத்தகம் அனுப்பி வைக்கப்படுகிறது. சைவமும், வைணமும், இந்து மத இணைப்பு விளக்கம் உள்ளிட்ட 4 நூல்கள் ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : test writers ,house home , Competition selection, Characteristics
× RELATED பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு ஜூன் 3ல் அசல் மதிப்பெண் சான்று