1.5 கிலோ தங்கம் கொள்ளைபோன விவகாரம்: நடிகர் பார்த்திபன் புகார் கொடுத்து 5 மாதமாகியும் நடவடிக்கை இல்லை: நகைகளை மீட்டுத்தர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை

சென்னை: திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சென்னை திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகரில் வசித்து வருகிறார். இவர் வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை மாயமானதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் மீண்டும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே மாயமான நகைகளுடன் சேர்த்து தற்போது ஒன்றரை கிலோ தங்க நகைகள் மாயமாகி  உள்ளதாக இரண்டாவது முறையாக புகார் அளித்தார். வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்கப்படாமல் இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

நடிகர் பார்த்திபன் கொடுத்த இரண்டு புகார்களின் படி போலீசார் வீட்டு  வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகிய நிலையில் இன்று வரை  ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த குற்றவாளிகள் யார் என்று கூட கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதையடுத்து நடிகர் பார்த்திபன் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை நேரில் சந்தித்து திருட்டு தொடர்பாக புகார் அளித்தார்.

அப்போது, திருட்டு தொடர்பாக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து விரைவில் குற்றவாளிகள் கைது ெசய்யப்பட்டு நகைகள் மீட்கப்படும் என்று நடிகர் பார்த்திபனிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. உடனே திருட்டு தொடர்பாக நடிகர் பார்த்திபன் வீட்டு  வேலைக்கார பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>