×

‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷத்துடன் பாஜ உண்ணாவிரத பந்தல் அருகே ஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  தலைமைச் செயலகம் முன்பு பாஜ தலைவர் பத்மநாபன் உண்ணாவிரதம் இருக்கும் பந்தல்  அருகே ஐயப்ப பக்தர் ஒருவர் சரண கோஷத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சபரிமலையில்  144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜ சார்பில்  திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்  நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி பாஜ பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன்  காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடந்த இரு தினங்களுக்கு முன்  அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து  திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு பதிலாக பாஜ தலைவர் பத்மநாபன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நேற்று  3வது நாளாக அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார். உண்ணாவிரத பந்தலில்  அவருடன் பாஜவை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று  அதிகாலை 1.30 மணியளவில் பந்தலின் நேர் எதிரே உள்ள கட்டிடம் முன் ஒருவர்  உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். இதை பார்த்த பாஜ தொண்டர்கள்  கூக்குரலிட்டனர். இதைக்கேட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதற்கு முன்பு  அந்த நபர் தனது உடலில் தீவைத்துக் ெகாண்டார். போலீசார்  மற்றும் பாஜ தொண்டர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் திருவனந்தபுரம் முட்டடை  பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் நாயர்(49) என தெரியவந்தது. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இதற்கிடையே, ஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை செய்ததை தொடர்ந்து இன்று கேரளாவில் பந்த் போராட்டத்திற்கு பாஜ அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,suicide ,Bhajan Bhavana with 'Chameleon Chariot Ayyappa , Ayyappa devotees commit suicide, Bhajan Bhavana ,'Chameleon Chariot Ayyappa'
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்