கஜா புயலால் பாதித்தோருக்கு போர்வை வாங்கியதில் அமைச்சர்கள் ஊழல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

மதுரை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழக அரசை பாஜ காப்பாற்றும் என நினைக்கிறார்கள். பாஜ தன்னையே காப்பாற்ற முடியாத நிலையில் எப்படி தமிழக அரசை காப்பாற்றும்? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட மாநிலத்தில் பாஜவுக்கு பெரிய அளவு தோல்வி இல்லை என கூறுவது, அவர் மோடி அரசுக்கு எடுபிடியாக இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பெரிய தோல்வி இல்லை என தமிழிசையும்  விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். பாஜ கட்சி இனிமேல் இருக்கப் போவதில்லை என்பது அவருக்குத் தெரிந்த ஒன்றே. தமிழிசை அக்கட்சியிலிருந்து விலகி வேறு ஏதாவது இயக்கத்தில் சேர்ந்தால் வார்டில் போட்டியிட்டாவது ஜெயிக்க முடியும்.

கஜா புயல் நிவாரணப் பணிகளிலும் ஊழல் நடந்துள்ளது. கரூர் போன்ற பகுதிகளில் அதிகளவு நெசவாளர்கள் போர்வையை உற்பத்தி செய்து வைத்திருந்தும், குறைந்த விலைக்கு அவர்களிடம் வாங்காமல் வட மாநிலத்தில் இருந்து வாங்கி பெரிய அளவில் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர். காங்கிரசை பொறுத்தவரை தமிழகத்தில் திமுகவுடன் பலமான கூட்டணியாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். டிடிவி தினகரன் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. எனவே டிடிவி தனது கட்சியை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ministers ,purchase ,quagmire hawala victims ,EVGES Ilangovan , Gajah Storm, Ministers scandal, Ekvs Ilangovan
× RELATED சொல்லிட்டாங்க...