×

அடர்ந்த வனப்பகுதியில் தவம் இருந்த புத்த மத துறவி சிறுத்தை தாக்கி பலி

சந்திராப்பூர்: அடர்ந்த வனப்பகுதியில் தவம் இருந்த புத்த மத துறவி ஒருவர் சிறுத்தைப்புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நாக்பூரில் இருந்து 150 கிமீ தூரத்தில், சந்திராப்பூர் மாவட்டத்தில் ராம்தேகி என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க புத்த மத கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு புத்த மதத்துறவிகள் அடிக்கடி வந்து வழிபாடு நடத்திச் செல்வது வழக்கம். சமீபத்தில் ராம் வால்கே(35) என்ற புத்த மத துறவி இந்த கோயிலுக்கு வந்தார். கோயிலில் வழிபாட்டை முடித்த பிறகு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து அவர் தவம் செய்யத் தொடங்கினார். அந்த அமைதியான சூழலும் பசுமையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவர் அந்த மரத்துக்கடியிலேயே மேலும் சில நாட்கள் தவம் இருக்க விரும்பி அதன்படியே செய்தார்.

அவருக்கு தினமும் இரண்டு துறவிகள் கோயிலில் இருந்து உணவு எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், புத்த மத துறவி ராம் வால்கே தவம் இருக்கும் பகுதி சிறுத்தைப்புலிகள் நடமாடும் இடம் என்பதால் அங்கு அதிக நாட்கள் தவம் இருக்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையையும் மீறி ராம் வால்கே கிட்டத்தட்ட ஒரு மாதமாக அந்த இடத்திலேயே தொடரந்து தவம் இருந்தார். இந்த நிலையில், கடந்த 11ம் தேதியன்று அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைப்புலியால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : monk ,forest , Dark forest, Buddhist monk, leopard, kills
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...