×

அதிகாரிகள், ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் குடிபோதையில் ஆபாச வீடியோ பதிவேற்றிய கோயில் பிஆர்ஓ

திருமலை: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிஆர்ஓ குடிபோதையில் அதிகாரிகள், ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்தார். ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கான வரவேற்பு (பிஆர்ஓ) அதிகாரியாக பணிபுரிபவர் கங்காதரம். இவர், நேற்று இரவு உள்ளூர் கோயில் திருவிழா ஒன்றில் கலந்துகொண்டு குடிபோதையில் இருந்தாராம்.

அப்போது, காளஹஸ்தி கோயில் அதிகாரிகள், ஊழியர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கோயில் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார். இதற்கிடையே கங்காதரம் பதிவேற்றம் செய்த வீடியோக்களை பார்த்த பெண் ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிஆர்ஓ கங்காதரத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோயில் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BRITO ,Watts Group , Officers, staff, whatsapp group, drunken, porn video
× RELATED கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது!