×

ஈரானில் ரஷ்யா எண்ணெய் வாங்க இந்தியா தடுப்பது ஏன் தெரியுமா?

துபாய்: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனையில் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனத்தின் 3,500 பெட்ரோல் பங்க்குகளை ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனம் 1,290 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய நிறுவனம் ஈரானில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா தடை செய்துள்ளது. இது குறித்து ஈரான் எண்ணெய் அமைச்சர் பிஜான் சகனேஹ் கூறுகையில், ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்காக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ரஷ்யா வாங்கிய நிறுவனம் இந்தியாவில் பதிவு பெற்ற நிறுவனம். இதனால் இந்த சிறப்பு அனுமதியுடன் இறக்குமதி செய்வதில் ரஷ்யாவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Russia ,Iran , Iran, Russia, Oil, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...