×

எண்ணூர், மணலி பகுதியில் 998 கண்காணிப்பு கேமரா : கமிஷனர் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: சென்னை மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் சிசிடிவி  கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, எண்ணூர் விரைவு சாலை, மணலி சாலை, கல்மண்டபம் சாலை போன்ற இடங்களில் 998 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வடசென்னை முழுவதும் 25 கிமீ தூரம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடியும். இவற்றில் 11 சாலைகளும் அடங்கும். இதன் துவக்க விழா எண்ணூர் விரைவு சாலை எல்லை அம்மன் கோயில் தெரு அருகே நேற்று நடந்தது. கண்காணிப்பு கேமராவை, மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:

சிசிடிவி கேமரா பொருத்திய பிறகு சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றங்களை குறைப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளது. எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய உரிய கவனம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூடுதல் கமிஷனர் அருண், சென்னை தெற்கு இணை கமிஷனர் சுதாகர், சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர்கள் ரவுலிபிரியா, தேன் தமிழ்வாணன், அமுல்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரமுருகேசன், இளையராஜா, பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Ennore ,Manali , Commissioner started , 998 Surveillance camera, Ennore, Manali area
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்