×

முத்துப்பேட்டையில் தீ மூட்டிய வெளிச்சத்தில் மின் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு பிறகு அனைத்து மின்கம்பங்களும் காற்றின் வேகத்திற்கு சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 27நாட்கள் கடந்தும் 900க்கும் மேற்பட்ட மின் பணியாளார்கள் இரவு பகல் பாராமல்  முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் இன்னும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கூட சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாமல் உள்ளதால் மக்கள் மின்சாரமில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமம் பகுதியில் கடந்த சில தினங்களாக மின் சீரமைப்பு பணிகளில் இரவு பகல் பாராமல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பணியின்போது வெளிச்சத்துக்கு அருகில் கிடந்த விறகுகளை கொண்டு தீயை மூட்டி அதில் ஏற்படும் வெளிச்சத்தை கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதியின் தங்களது பேஸ்புக் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளனர். இதில் ஏராளமானவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படும் மின் பணியாளர்களை வாழ்த்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gajah Storm, Muthupettai, Staff
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...