×

பேரையூர் மக்களை மகிழ்வித்த கீதாவள்ளி யானை மரணம்

பேரையூர்: மதுரை பேரையூர் மேலத்தெருவில் வசிக்கும் சிக்கும் சிக்கந்தர்ராவுத்தர் மகன் கபீர்அகமது. இவர் கீதாவள்ளி என்ற யானையை கடந்த 40 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்த யானை இப்பகுதியிலுள்ள அனைத்து கோயில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகவிழா உள்ளிட்ட இந்துக்கள் கோயில்களின் விழாக்களுக்கு சென்று அலங்கரித்து பொதுமக்களுக்கு ஆசிவழங்கி வந்தது.  52வயதான இந்த யானைக்கு கடந்த 10 நாட்களாக உடல்நலன் குன்றி அவதிப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்பட்டாலும் இந்துமத கலாசாரம் மாறாமல் விபூதிபட்டை அலங்காரத்துடன்தான் வலம் வந்த கீதாவள்ளி இறந்த செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

திருவில்லிப்புத்தூர் வனத்துறை உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் அல்லிராஜ், சாப்டூர் வனச்சரகர் பொன்னுச்சாமி, மதுரை வனச்சரகர் ஆறுமுகம், கால்நடை மருத்துவர்கள் பேரையூர் முருகன், சாப்டூர் பெத்திராஜ், எஸ்.மேலப்பட்டி கற்பகவள்ளி உள்ளிட்டோர் இறந்த யானையின் உடலை  பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின் யானை வளர்ந்த வீட்டின் அருகிலேயே புதைத்தனர். இதுகுறித்து வனச்சரகர் பொன்னுச்சாமி கூறுகையில், யானையின் ஆயுட்காலம் 60 வயது வரை இருக்கும். கீதாவள்ளி 52 வயதானதால் வயது முதிர்வும், உடல்நிலைக் குறைவாலும் உயிரிழந்துள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : delight ,Geethavalli , Peraiyur, elephant, death
× RELATED ரூ.10-க்கு ஆவின் டிலைட் 200 மி.லி. பால்...