டெல்லி: நடந்துமுடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி செய்துவந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சரை தேர்வுசெய்யும் அதிகாரத்தை கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கி எம்எல்ஏ-க்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
3மாநிலங்களிலும் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட எம்எல்ஏ-க்களிடம் தனித்தனியாகவும் பார்வையாளர்கள் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். இதையடுத்து, டெல்லி திரும்பியுள்ள மேலிடப் பார்வையாளர்கள், ராகுல் காந்தியை இன்று காலை சந்தித்து, எம்எல்ஏ-க்கள் தெரிவித்த கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இதனடிப்படையில் புதிய முதலமைச்சர்கள் இன்று தேர்வுசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படியும், ரகசிய வாக்கெடுப்பு மூலமும் முதலமைச்சரை தேர்வுசெய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் முதல்வர் போட்டியில் உள்ள அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரும் டெல்லியில் இன்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி