×

உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் யாமகுச்சியை வீழ்த்தினார் சிந்து

குவாங்ஸூ: உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, நடப்பு சாம்பியன் அகானே யாமகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தினார். சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஏ பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்திலேயே 2வது ரேங்க் வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான யாமகுச்சியின் சவாலை சிந்து எதிர்கொண்டார். கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை சிந்து 24-22 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 24-22, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா 18-21, 6-21 என்ற நேர் செட்களில் நம்பர் 1 வீரர் கென்டோ மொமோடாவிடம் (ஜப்பான்) தோல்வியை தழுவினார்.
இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறுவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Tour Pains Badminton ,Yamaguchi Sindhu , World Tour Pains Badminton, Yamaguchi, Sindhu
× RELATED உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் : இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன்