×

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி தமிழிசை பேசியது ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் சாவு என்பதாக உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் திட்டம் நேற்று காலை தொடங்கப்பட்டது. இதையொட்டி சென்னை வியாசர்பாடி சுந்தரம் மெயின் தெருவில் உள்ள டான் போஸ்கோ முதியோர் விடுதியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் முதியோர்களுக்கு இலவசமாக நிமோனியா காய்ச்சல் தடுப்பு ஊசி போடும் திட்டத்தை நேற்று காலை தொடங்கி வைத்தனர்.பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு, தற்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, சுகாதார துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து இலவசமாக நிமோனியா காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஊசியின் மூலம் போடப்படும் மருந்தின் விலை ₹2 ஆயிரம். ஆனால், அரசு சார்பில் இலவசமாக போடப்படுகிறது.மேகதாது அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழக அரசும், இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். 5 மாநில சட்டமன்ற தேர்தலில், அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை பொறுத்து, அவர்களுடைய வெற்றி வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேர்தலை பற்றி அவர் கூறிய கருத்து பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால், ஆபரேஷன் சக்சஸ். ஆனால் பேஷன்ட் டைடு என்ற உதாரணம் போல் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Operation Success Passion ,state ,Tamila Jayakumar , Operation Success Passion, speak to Tamils, 5th State Assembly,Interviewed by Minister Jayakumar
× RELATED ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி