×

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது காங்கிரஸ்...117 உறுப்பினர்கள் ஆதரவு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது. 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சியும், 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சியும் அறிவித்துள்ளது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதனையடுத்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது என சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் காரணமாக காங்கிரஸை ஆட்சி அமைக்க வருமாறு மத்திய பிரதேச கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் உள்ளிட்டோர் மத்திய பிரதேச கவர்னர் ஆனந்தி பென் பட்டேலை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிம் பேட்டியளித்த கமல் நாத், “காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,provinces ,Governor ,Madhya Pradesh , Madhya Pradesh, governor, governor, congress, members
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...