வெகு விமரிசையாக நடைபெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மகாகும்பாபிஷேகம்

திருச்சி: பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர், ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமானங்கள் மீது வேதமந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்டது. முதற்கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக பங்றே்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு சுமார் 5 கோடி மதிப்பில் உபயதாரர்கள் மூலம் புனரமைப்பு செய்யபட்டது. தொடர்ந்து 2 கட்டங்களாக மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்து, இக்கோயில் பாிவார மூர்த்திகளுக்கு முதல்கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.

2ம் கட்டமாக ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர  விமான  மகா கும்பாபிஷேகம் இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாக குண்டங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி இரவு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 10, 11ம் தேதிகளில் 2,3 மற்றும் 4,5ம் கால யாக பூஜைகள் நடந்தன. நாளை காலை 6ம் கால பூஜையை தொடர்ந்து தீபாராதனையுடன் கடங்கள் புறப்பட்டு சகல ராஜகோபுரம் மற்றும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்மன் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்