×

மிசோரம் மாநிலத்தில் காங்.,-கிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது மிசோ தேசிய முன்னணி

அய்சால்: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமாக இருந்தது மிசோரம். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சியை கைப்பற்றியுள்ளதையடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியினர் மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 28-ல் ஒரே கட்டமாக .40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், ஆளும் காங்கிரஸ் கட்சி - மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே கடும் இழுபறி இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால் கணிப்புகளை பொய்யாக்கி துவக்கம் முதலே மிசோ தேசிய முன்னணி, தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மிசோ தேசிய முன்னணி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், மற்றவை 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் லால் தனாவ்லாவும், தெற்கு சம்பாய் தொகுதியில் தோல்வியை தழுவினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mizoram State ,Congo ,National Front ,Mitho , Northeast States, Congress, Mizo National Front
× RELATED பாஜ கூட்டணியை முறியடிக்க இந்தியா...