×

தெலுங்கானாவின் சிர்சிலா தொகுதியில் சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமாராவ் முன்னிலை

ஐதராபாத் : தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.20 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மீசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் டிஆர்எஸ் கட்சி 90 இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது.

தெலுங்கானாவில் டிஆர்எஸ், பாஜ கட்சிகள் தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் போட்டியிட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் 19 இடங்களிலும்  பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. டிஆர்எஸ் கட்சி 90 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனினும் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பின்னடைவில் உள்ளார். அதே நேரத்தில் அவரது மகன் கே.டி.ராமாராவ் முன்னிலையில் உள்ளார். சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் கே.டி.ராமாராவ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மீண்டும் தெலங்கானா முதல்வராக நாளை சந்திரசேகரராவ் பதிவு ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KD Ramaraj ,Chandrasekara ,constituency ,Telangana ,Sircilla , Telangana, Legislative Election, Siriska Block, KD Ramaraj, TRS
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...