×

மிசோரமில் உள்ள சாம்பியா தொகுதியில் முன்னாள் முதல்வர் லால் தன்வாலா பின்னடைவு!

மிசோரம் : மிசோரமில் உள்ள சாம்பியா தொகுதியில் முன்னாள் முதல்வர் லால் தன்வாலா பின்னடைவில் உள்ளார். மிசோரம் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மிசோரமில் நவம்பர் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தமாக உள்ள 40 தொகுதிகளுக்கு 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் ஆட்சிமைக்க 21 தொகுதிகள் தேவை என்ற நிலையில, மிசோ தேசிய முன்னணி கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் பாஜக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

எனவே இங்கு மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் மிசோரமில் உள்ள சாம்பியா தொகுதியில் முன்னாள் முதல்வர் லால் தன்வாலா பின்னடைவில் உள்ளார். போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முதல்வர் லால் தன்வாலா பின்னடைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் போட்டியிட்ட தொகுதியில் தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Lal Tanwala ,Mizoram ,Zambia , Mizoram, Chief Minister Lal Tanwal, Zambia constituency, Legislative Assembly election
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...