இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை

துபாய்: இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச தடை ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் டெஸ்டில் 27 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 14 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் எனவும் ஐசிசி தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு அவர் மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தனஞ்ஜெயாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் முக்கிய பந்துவீச்சாளர் தனஞ்ஜெயா தடை செய்யப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>