×

பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சுற்றுச்சூழல் கமிட்டி தலைவர் சுவாமிநாதன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தடை விதித்த உத்தரவை எங்களால் ஏற்க முடியாது. இதனால் அரசாங்கத்திற்கு ரூ.1,800 கோடி அளவிற்கு வரி இழப்பு ஏற்படும். 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கண்டித்தும், அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் வரும் 13ம் தேதி சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அரசு எங்களுடன் பேசி சுமுக தீர்வு காணவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமை வரும். இதேபோல், பிளாஸ்டிக் மீதான தடை மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plastics Manufacturer Association , Plastic Manufacturers Association,
× RELATED பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்