×

முருங்கைக்காய் விலை உயர்வு: கிலோ ரூ.100க்கு விற்பனை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அப்டா, வடசேரி கனகமூலம் சந்தைகளுக்கு நெல்லை,  தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் இருந்து  முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு முருங்கைக்காய் கிலோ ₹180 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து கிலோ ₹10க்கு  விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் விலை உயர்ந்து ₹21க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் வெளி மாவட்டங்களில் முருங்கைக்காய் உற்பத்தி குறைந்து, தற்போது  வரத்து குறைந்துள்ளது. இதனால் முருங்கைக்காய் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ₹150 வரை எகிறியது. பின்னர் படிப்படியாக ஓரளவு குறைந்து  தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் ₹100க்கு விற்பனையாகி வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு முருங்கைக்காய் ₹10 முதல் 15 வரை விற்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muruganai , Price of drumstick, kg
× RELATED பாஜவுடன் கூட்டணி வைத்ததால் சமூக...