டெல்லி: ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் சமதா கட்சி விலகியுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் குஷ்வாகா விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விலகிய உபேந்திர குஷ்வாகா, தனிக் கட்சி தொடங்கி, பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.
குஷ்வாஹாவையும் சேர்த்து, பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி