×

வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்கும் மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டிற்குள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டுமானம், விவசாயம் மற்றும் நர்சிங் துறையில் பெரும் அளவிலான வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படுவர். இதன் வாயிலாக சுமார் 3 லட்சம் வெளிநாட்டினர் ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் எத்தனை வெளிநாட்டு தொழிலாளர்கள் வரவுள்ளனர் என்பது பற்றியும் அதற்குண்டான மதிப்பீட்டை காட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கேட்டுள்ளன. அதற்கு ஜப்பான் அரசு பதிலளிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே சமயம் இந்த அனுமதியினால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருமானம் குறையக்கூடும் என்றும் அவர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் எனவும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தரப்பினர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parliament ,Japan , bill,allow,foreign workers,Japan,passed,parliament
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...