×

சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில் அமளி: 6வது நாளாக முடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 6வது நாளாக கேரள சட்டப்பேரவை முடங்கியது. சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சபரிமலை விவகாரம்

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையான பெண்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சபரிமலையில் கேரள அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மிகுந்த கெடுபிடிகளுக்கு பின்னரே, ஐயப்பன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும் புகார் எழுந்தது.இதனிடையே சபரிமலையில் வரும் 20ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள சட்டப்பேரவை ஒத்திவைப்பு

நவம்பர் 28ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில் காலையில் அவை கூடியதும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் சபரிமலையில் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினர். அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியபடி, சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்து கூச்சலிட்டனர்.

மேலும் சபரிமலையில் விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவிற்கு எதிராக சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனநாயகம் முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் சட்டமன்றத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் பேரவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala ,Kerala Legislative Assembly , Sabarimala, Opposition, Legislative, Ambassador, 144, Congress, Speaker, Kerala,adjourned
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு