×

உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்.. ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்து அசத்தல்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்ச்களை பிடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்கள் பிடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. இதற்கு முன் 1995-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ராபர்ட் ரசல் என்வரும், கடந்த 2013-ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனை படைத்திருந்தனர். தற்போது இந்தச் சாதனையை இந்திய வீரர் ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.

இந்திய அணி விக்கெட்கீப்பர்களை பொறுத்தவரை, இந்த ஆண்டு தொடக்கத்தில் கேப்டவுனில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த விருதிமான் சஹா அப்போட்டியில் மொத்தம் 10 கேட்ச்கள் பிடித்திருந்ததே இந்திய வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. இதே ஆண்டில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்களை பிடித்து ரிஷப் பண்ட் அந்த சாதனையையும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rishabh Bund , Rishabh Pant,world record,match,most catches,test cricket,INDvsAUS
× RELATED இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு மருத்துவ பரிசோதனை