×

சென்னையில் சொந்த முயற்சியில் அரசுப்பள்ளியில் நூலகம் அமைத்த தலைமை நூலகர்!

சென்னை : சென்னையில் பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் 40 ஆண்டுகளாக பெருமாள் என்பவர் தலைமை நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இவர் தற்போது எழும்பூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு நூலகத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்ட இந்த பள்ளியை நாடிய பெருமாள், அங்கு செயல்படாமல் இருந்த நூலகத்தை தத்து எடுத்து நடத்த விருப்பம் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையின் உரிய அனுமதியுடன் இதை மேற்கொண்ட அவர் தனது சொந்த பணம் ஒரு லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள், அலமாரிகள் உள்ளிட்ட அறைகலன்களை வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் தனது முயற்சியாலும், நண்பர்களின் உதவியோடும் இருபதாயிரம் புத்தகங்களை திரட்டி புதுப்பொலிவுடன் நூலக்கதை அமைத்துள்ளார். இந்த நூலகம் பள்ளி வேலை நாட்களில் குறிப்பிட்ட வேலை நேரங்களில் இங்குகிறது. பள்ளியிடம் இருந்து பணம், அரசு சம்பளம் போன்றவற்றை எதிர்பார்க்காமல் ஒரு சேவையாக இதனை 84 வயதான நூலகர் பெருமாள் செய்து வருகிறார். மேலும் மாணவர்களின் வருகை அதிகரித்து வருவதால், தீபிகா என்ற உதவி நூலகரையும் நியமித்து, தனது ஓய்வூதியத்தில் இருந்து ரூ. 10 ஆயிரத்தை மாதந்தோரும் அவருக்கு வழங்கி வருகிறார். அடுத்த தலைமுறை மாணவர்கள் புத்தகங்களிடம் இருந்து விலகி செல்வது வருத்தமாக உள்ளது என்றும், ஒரு நூலகம் திறக்கப்படும் போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Librarian ,Library ,Chennai ,Government School , Chennai, Government School, Library, Chief Librarian, Books
× RELATED ஊட்டி மைய நூலகத்தில் நடந்த கோடை கால பயிற்சி நிறைவு