×

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எதிரொலி : காண்போரை கவரும் பிளாஸ்டிக் சுரங்கப்பாதை

லண்டன் : கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் எதிரொலியாக இங்கிலாந்தில் பிளாஸ்டிக்கினால் வண்ணமயமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.இந்நிலையில் கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாகவும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும் வண்ணமையமான் விளக்குகள் மற்றும் பிளாஸ்டிக்கில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

ப்யூட் என்ற இடத்தில் 230 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதைதான் உலகிலேயே மிக நீளமான பிளாஸ்டிக் சுரங்கப்பாதை என்ற பெயரை பெற்றுள்ளது. குழந்தைகளை பெரிதும் கவரும் இந்த சுரங்கப்பாதையில் 30,000திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுற்றப்பட்டுள்ள மின் வயர்களின் நீளம் மட்டும் 9 கிமீ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க பாதை அங்கு வரும் அனைவரின் கருத்தையும் கவர்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo of Christmas Celebration ,tunnel ,England ,viewers , Christmas, tunnel, plastic, Bude, electric lights
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!