×

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் காங்கிரஸ் பிரமுகரை கொன்றவர் உள்ளிட்ட 21 பேருக்கு குண்டாஸ்: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வந்ததால் காங்கிரஸ் பிரமுகர் கொலை குற்றவாளி உள்பட 21 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவரை வெட்டி கொலை செய்த ராயப்ேபட்டை யானைகுளம் 6வது தெருவை சேர்ந்த இம்ரான் (எ) இம்ராஜதீன் (30), கொலை மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய கண்ணகி நகரை சேர்ந்த விக்டர் (32), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பொன்னேரி சுந்தர் அவென்யூ புதூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (24), கும்மிடிபூண்டி பாலகிருஷ்ணபுரத்தை ேசர்ந்த கிஷோர்குமார் (24), பொன்னேரி நாயர் காலனியை நேர்ந்த சதீஷ் (25), ஆவடி காமராஜ் நகர் பாரதி தெருவை சேர்ந்த லட்சுமிபதி (29), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த சரவணன் (22), வெடி குண்டு வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி பகுதியை சேர்ந்த சையது அமீன் பாட்ஷா (எ) அமீன் பாட்ஷா (25),

அயூப்கான் (25), கொலை வழக்கில் தொடர்புடைய இரும்புலியூர் ஏரிக்கரை அந்தோணியர் தெருவை சேர்ந்த மணிக்கம் (24), தேற்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜா (37), பெருங்களத்தூர் இந்திரா காந்தி நகரை சேர்ந்த கிஷோர் (37), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த வெங்கடேசன் (எ) வெங்கையா (எ) வெங்கடேசன் (35), திருமுல்லைவாயில் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாபு (எ) ஜார்ஜ் விஜய்பாபு (30), செந்நீர்குப்பம் வெற்றிலைத்தோட்டத்தை சேர்ந்த சபீர் (24), பாலாஜி (18), கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 6வது தெருவை சேர்ந்த பூபாலன் (27), கோவர்த்தனகிரி பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்த அஜித் (எ) ஜெகநாதன் (26), அடிதடி வழக்கில் தொடர்புடைய அண்ணாநகர் மேற்கு விரிவு பாடிக்குப்பம் சாலையை சேர்ந்த டேனியல் (22), மோகன் (25), கஞ்சா வழக்கில் தொடர்புடைய பழைய வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சித்ரா (32) ஆகிய 21 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AK Vishwanathan , Series crime, kundas, commissioner AK Vishwanathan
× RELATED தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...