×

கரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 7ம் தேதி நடந்தது. இதில்,  கங்காநகர் மாவட்டத்தின் கரன்பூர் தொகுதிக்கு உட்பட்ட எண் 163 வாக்கு பதிவு மையத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை  மறுதேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குமையத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள், மாதிரி தேர்தல் நடத்தாமல் பயன்படுத்தப்பட்டவை என தெரியவந்ததைத்  தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2013ல் ராஜஸ்தானில் 8 வாக்கு மையங்களில் மறுதேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Re-election ,constituency ,Karanpur , Karanpur ,Module, ballot box, Repeat today
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...