×

திருவானைக்காவல் கோயில் பாிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்

திருச்சி: பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோயிலில் முதல்கட்டமாக பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக இன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 7 மணியளவில் யாகசாலையில் இருந்து கடங்கள் (புனிதநீர் குடங்கள்) புறப்பாடு நடைபெற்றது.  தொடர்ந்து  7.55 மணிக்கு அனைத்து பரிவார விமானங்கள், பாிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாிசனம் செய்தனர்.  காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அர்ச்சகர்கள் பரிவார மூர்த்தி சன்னதி, விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்களில் புனிதநீர் ஊற்றினர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார். 2ம் கட்டமாக 12ம்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் இன்று முதல் 12ம் ேததி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Thiruvanaikaval , Thiruvanaikaval Temple, Bhivara Murthy, Kumbabhishekam
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...