×

அடுத்த மாதம் முதல் கவுனுக்கு குட்பை: பேன்ட், சுடிதாருக்கு மாறும் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்கள்

புதுக்கோட்டை: தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 25 ஆயிரத்துக்கு அதிகமான நர்ஸ்கள் பணியாற்றி வருகிறார்கள்.  இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சுமார் 150 ஆண்டுகளாக கவுன் போன்ற(பினோபாம்)  வெள்ளை நிற சீருடை அணிந்து பணியாற்றி வந்தனர். கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் இந்த சீருடை அணிந்து பணியாற்றுவது மிகவும் சிரமமாக இருப்பதாக நர்ஸ்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக நோயாளிகளுக்கு குனிந்து, தரையில் அமர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத அளவு அசவுகரியங்கள் ஏற்படுவதாக அரசிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.  இந்த சிரமங்களில் இருந்து விடுபடும் வகையில் தமிழக அரசு நர்ஸ்களின் சீருடையில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த (2019)ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து  அரசு  மருத்துவமனைகளிலும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இது குறித்து தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வளர்மதி கூறியதாவது: நர்சுகள் 150 ஆண்டுகாலமாக அசவுகரியங்களுடன் பழைய வகையான சீருடைகளை அணிந்து சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது இருக்கும் சூழ்நிலையில் நர்சுகளின் பணிக்கு ஏற்றவாறு சீருடை மாற்றம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திோம். இந்நிலையில் தற்போது தமிழக அரசு சீருடையில் மாற்றத்திற்கான அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஆணையின்படி நர்ஸ்கள் பணியில் முதல் பத்தாண்டுகள் வெள்ளை நிற பேன்ட் சட்டையும், இதன் பிறகு வெள்ளை நிற சுடிதார், கோட்டும் அணிந்து பணியாற்றுவர். மேலும் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிங்க் நிற புடவை மற்றும் கோட் அணிந்தும், 30 ஆண்டுகளுக்கு பிறகு  பச்சை நிற புடவை மற்றும் கோட் அணிந்தும் பணியாற்றுவார்கள். மேலும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் பிங்க் பேன்ட், சட்டை அணிந்து பணிபுரிவர். இதேபோல் ஆண் செவிலியர்களுக்கும் சீருடையில் நிறமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government Hospital Nurse , Gown, goodbye, punt, chudidar, government hospital, nurses
× RELATED ஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா