×

ராஜஸ்தான் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம் : 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு  இயந்திரம் நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிடப்பட்டு, பலத்த பாதுகாப்புடன், பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடக்க உள்ளது.

இந்நிலையில், பரண் மாவட்டம் கிஷன்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட முகாவலி கிராமத்தின் அருகே நெடுஞ்சாலை ஓரம், வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சோதனையிட்டதில், அது சீலிடப்பட்டிருந்தது. வரிசை எண்: BBUAD41390 என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அந்த இயந்திரம், தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியானது.உடனடியாக, பாதுகாப்பான இடத்திற்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக அப்துல் ரபிக், நவால் சிங் என்ற 2 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Rajasthan , Rajasthan election, polling machine ,found on road,2 officers suspended
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி