போலி பாஸ்போர்ட்டில் லண்டன் செல்ல முயன்றவர் கைது

மீனம்பாக்கம்: போலி பாஸ்போர்ட்டில் லண்டன் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.  சென்னை சர்வதேச முனையத்தில் இருந்து பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு லண்டன் புறப்பட தயாராக இருந்தது. அதில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (34) என்ற பெயிரில் லண்டன் செல்ல வந்தவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, போலி என தெரிந்தது.

அந்த வாலிபரின் பயணத்தை ரத்து செய்து, அவரை தனி அறையில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். அதில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த  ராஜேஷ் (32) என்பதும், தனது அண்ணனின் பாஸ்போர்ட் மூலம் லண்டன் வழியாக கனடா நாட்டில் வேலைக்கு செல்ல இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் அவரை கைது செய்து, போலி பாஸ்போர்ட்டில் பயணிக்க ஏற்பாடு செய்த அவரது அண்ணனையும், அவருக்கு உதவிய மர்ம நபரையும் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மேலும்...