×

காலிபிளவர் மிளகு பொரியல்

செய்முறை :
முதலில் காலிபிளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்த பொருட்களை சிறிதளவு நீர் விட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் நறுக்கிய  பல்லாரி, மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் காலிபிளவர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேக  வைக்கவும். பின்னர் மூடியை திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக வேகும்வரை சுருளக் கிளறி இறக்கவும்.
சுள் சுவையில் காலிபிளவர் மிளகுப்பொரியல் ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauliflower,pepper,fry
× RELATED இன்று தேசிய மாசு தடுப்பு தினம்: சுத்தமற்ற காற்று நம் ஆயுளை குறைக்கும்