×

தஞ்சை அருகே கிணறு 15 அடி உள்வாங்கியது: கஜா புயல் தாக்கியதில் நிகழ்ந்ததா? பரபரப்பு

தஞ்சை: தஞ்சை அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி ஊராட்சி நா.வல்லூண்டான்பட்டு கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழில். இங்கு சொர்ணகாளியம்மன் கோயில் அருகே 1957ம் ஆண்டு கட்டப்பட்ட 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. 61 ஆண்டுகளாக இப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் இக்கிணறு தான் குடிநீர் ஆதாரம். தற்போது இக்கிணறு திடீரென 15 அடிக்கு கீழே உள்வாங்கியுள்ளது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வீரன் கூறும்போது, சமீபத்தில் வீசிய கஜா புயலால் இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நிலப்பரப்பு ஊறிப்போன நிலையில் கிணறு உள்வாங்கியதாக தெரிகிறது.

இக்கிணறு 90 அடி மட்டுமே இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தான் கிணற்றில் 10 அடிக்கு மேல் தூர்வாரினோம். இந்நிலையில் திடீரென கிணறு புதைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சொர்ணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கு இந்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினோம்.தற்போது கிணறு உள்வாங்கி விட்டதால் இனி குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். உடனடியாக புதிய போர்வெல் அமைத்து இப்பகுதியின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Tanjore ,Ghaz , Tanjore, well, the storm of Ghaja
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...